Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தென்கொரியாவுடன் கூட்டு ராணுவப் பயிற்சிகளை விரிவுபடுத்தும் அமெரிக்கா

வாசிப்புநேரம் -
அமெரிக்காவும் தென் கொரியாவும் ஒருங்கிணைந்த ராணுவப் பயிற்சிகளை விரிவுபடுத்த ஒப்புக்கொண்டுள்ளன.

ஏவுகணை எச்சரிக்கைத் தரவுகளை ஜப்பானுடன் பகிர்ந்துகொள்வதும் அதில் அடங்கும்.

வடகொரியா விடுக்கும் மிரட்டலைச் சமாளிப்பதில் தென்கொரியாவுக்குத் துணைநிற்கும் கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்த அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் (Lloyd Austin) சோல் சென்றுள்ளார்.

அவர் தென்கொரியத் தற்காப்பு அமைச்சர் லீ ஜோங்-சுப்பைச் (Lee Jong-sup) சந்தித்தார்.

இருநாடுகளுக்கும் இடையிலான வருடாந்திரப் பாதுகாப்புக் கலந்துரையாடல் இந்த ஆண்டு நடைபெறவிருக்கிறது.

அதற்குள் வடகொரியாவை எதிர்கொள்வதற்கான உத்திகளை ஆராய அமெரிக்காவும் தென்கொரியாவும் இணங்கியுள்ளன.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்