Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆசியான் தலைவர்களுடனான சந்திப்பு, ஒரு 'புதிய சகாப்தத்தின் தொடக்கம்' - அமெரிக்க அதிபர்

வாசிப்புநேரம் -
ஆசியான் தலைவர்களுடனான சந்திப்பு, ஒரு 'புதிய சகாப்தத்தின் தொடக்கம்' - அமெரிக்க அதிபர்

(படம்: Brendan SMIALOWSKI / AFP)

ஆசியான் தலைவர்களுடனான  சந்திப்பு ஒரு 'புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைப்' பிரதிபலிப்பதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார்.

அடுத்த 50 ஆண்டு உலக வரலாற்றின் பெரும்பகுதி ஆசியான் நாடுகளில் இடம்பெறும் என்றார் அவர்.

அமெரிக்காவுக்கும் ஆசியானுக்கும் இடையிலான உறவு இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கும் என்றும் திரு. பைடன் கூறினார்.

வாஷிங்டனில் ஆசியான் தலைவர்கள் சந்தித்தது இதுவே முதன்முறை.

அமெரிக்கா இந்தோ-பசிபிக் வட்டாரம் மீதும் சீனா கொடுத்துவரும் நீண்டகாலச் சவால் மீதும் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது என்பதை அது புலப்படுத்துகிறது.

இதற்கு முன்னதாக அமெரிக்கத் துணையதிபர் கமலா ஹாரிஸ் பல தலைமுறைகளுக்கு அமெரிக்கா இந்த வட்டாரத்தில் செயல்படும் என்று ஆசியான் தலைவர்களிடம் கூறியிருந்தார்.

கடல்பகுதிகளில் சுதந்திரத்தைக் கட்டிக்காப்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa