Skip to main content
ஈரானின் கடல் வழி வர்த்தகத்தை முழுமையாக முடக்கிவிட்டோம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஈரானின் கடல் வழி வர்த்தகத்தை முழுமையாக முடக்கிவிட்டோம் - அமெரிக்கா

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஈரானின் கடல் வழி வர்த்தகத்தை முழுமையாக முடக்கிவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இருநாடுகளுக்கு இடையே அடுத்த சில நாள்களில் சண்டைநிறுத்தப் பேச்சுவார்த்தை இடம்பெறக்கூடிய நிலையில் அமெரிக்காவின் அறிவிப்பு வந்துள்ளது.

ஈரானுக்கு நெருக்குதல் அளிக்கும் வகையில் அது அமைகிறது.

ஈரானின் பொருளாதாரத்தில் கடல்வழி வர்த்தகத்தின் பங்கு சுமார் 90 விழுக்காடு.

36 மணிநேரத்தில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அமெரிக்க மத்தியத் தளபத்தியத்தின் தளபதி பிராட் கூப்பர் (Brad Cooper) சொன்னார்.

அமெரிக்காவின் முற்றுகையால் திங்கட்கிழமை (13 ஏப்ரல்) முதல் 8 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. 

ஈரானுடன் செய்துகொண்ட சண்டைநிறுத்தம் 6 நாள்களில் முடிகிறது.

அதை நீட்டிக்கவேண்டிய அவசியம் இருக்காது என்று நம்புவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார்.

"பேச்சுவார்த்தை எப்படி வேண்டுமென்றாலும் முடியலாம். ஆனால் ஒப்பந்தம் செய்துகொண்டால் சிறப்பு என்று நினைக்கிறேன். அவர்களால் மீண்டும் நாட்டைச் சீரமைக்கமுடியும்," என்றார் அவர்.

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்