பேச்சுக்குப் பேச்சு பதில் அல்ல - ஈரான் எச்சரிக்கை
வாசிப்புநேரம் -
(படம்: SAUL LOEB / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்கா, ஈரான்மீது இரண்டாவது நாளாகத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.
கப்பல்கள் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலுக்குப் பதிலடி என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) கூறினார்.
ஈரான் தாக்குதல்களைத் தொடர்ந்தால் நிலைமை மோசமாகலாம் என்று திரு டிரம்ப் எச்சரித்தார்.
ஈரானின் தெற்குக் கரையோரமாகப் பல வெடிப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே சண்டைநிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகத் திரு டிரம்ப் கூறினார்.
ஒப்பந்தம் இல்லாமலேயே ஈரானின் அணுவாயுதத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்றார் அவர்.
ஈரானியத் தலைவர்கள் மோசமானவர்கள் என்று திரு டிரம்ப் சாடினார்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்ச்சி (Abbas Araghchi) அதற்குப் பதில் சொன்னார்.
பேச்சுக்குப் பேச்சு பதில் அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
மாறாகத் துணிச்சலுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

ஆதாரம் : AGENCIES