Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பதற்றத்துடன் தொடங்கவிருக்கும் அமெரிக்க-சீன உயர்நிலைச் சந்திப்பு

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உயர்நிலைப் பேச்சில் கலந்துகொள்ள, அமெரிக்க வெளியுறவுத் துணை அமைச்சர் வெண்டி ஷெர்மன் (Wendy Sherman) சீனா செல்லவிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உயர்நிலைப் பேச்சில் கலந்துகொள்ள, அமெரிக்க வெளியுறவுத் துணை அமைச்சர் வெண்டி ஷெர்மன் (Wendy Sherman) சீனா செல்லவிருக்கிறார்.

அவரது பயணம் இந்த வார இறுதியில் இடம்பெறவிருக்கிறது.

ஆனால் அதற்கு முன்பாகவே, தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடவேண்டாம் என பெய்ச்சிங் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவரைக் கீழறுக்க பெய்ச்சிங் முயல்வதாகக் கருதி, அவரது பயணத்தை அமெரிக்கா முன்னதாக ரத்து செய்யவிருந்தது.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை (Wang Yi), திருவாட்டி ஷெர்மன் சந்திப்பதற்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது.

இருப்பினும், திரு வாங் யீக்குப் பதிலாக, வெளியுறவுத் துணை அமைச்சர் சியே ஃபெங்கை (Xie Feng) அந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள சீனா நியமித்தது.

திரு சியே, திருவாட்டி ஷெர்மனுக்கு ஈடான பொறுப்பில் இல்லை என அமெரிக்கா கருதுகிறது.

ஆனால், திருவாட்டி ஷெர்மன், திருவாளர்கள் வாங் யீ, சியே இருவரையும் சந்திக்கும் வாய்ப்பை இப்போது பெற்றுள்ளார்.

சீனா, தனது அரசுரிமையையும், பாதுகாப்பு நலன்களையும் கட்டிக்காக்கும் உறுதியான நிலைப்பாடு பற்றி, திருவாட்டி ஷெர்மனுக்குத் தெளிவாக எடுத்துரைக்கவிருப்பதாய்க் கூறியிருக்கிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்