Skip to main content
அமெரிக்க சீன உறவு சீர்படுமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அமெரிக்க சீன உறவு சீர்படுமா?

வாசிப்புநேரம் -
அமெரிக்க சீன உறவு சீர்படுமா?

(கோப்புப் படம்: MARTIAL TREZZINI / FDFA / AFP)

சீனாவும் அமெரிக்காவும் வர்த்தக உறவைச் சீர்செய்ய முயல்கின்றன.

இருநாடுகளும் புதிய வர்த்தகக் கட்டமைப்பு குறித்து இணக்கம் தெரிவித்துள்ளன.

லண்டனில் இருதரப்புச் சந்திப்பு 2 நாள் நடந்தது.

இருதலைவர்களின் ஒப்புதலும் கட்டமைப்புக்குத் தேவை என்று சீன வர்த்தகத் துணை அமைச்சர் லீ செங்காங் (Li Chenggang) கூறினார்.

நம்பிக்கையை மெருகூட்டுவதில் தற்போது நடந்த பேச்சில் ஏற்பட்ட முன்னேற்றம் உதவும் என்று நம்புவதாக அவர் சொன்னார்.

அரிய கனிமங்களின் தொடர்பில் ஏற்பட்ட விரிசலைத் தீர்க்க முதல் கட்ட ஒப்பந்தம் கைகொடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லட்னிக் (Howard Lutnick) கூறினார்.

அமெரிக்கா சீனா மீது விதித்த வரியை 145 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காட்டிற்குக் குறைத்துள்ளது.
.
சீனா அமெரிக்கா மீது விதித்த வரிகளை 125 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காட்டிற்குக் குறைத்தது.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்