Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கடப்பிதழில் எழுதியதால் குடிநுழைவு மறுக்கப்பட்ட அமெரிக்கப் பயணி

வாசிப்புநேரம் -
போலந்துக் குடிநுழைவு அதிகாரிகள், கடப்பிதழில் எழுதிய பயணிக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்ததாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த அந்தப் பெண் புதன்கிழமை (8 ஜனவரி) விமானம் வழி லண்டனிலிருந்து போலந்திற்குச் சென்றார்.

அவரது கடப்பிதழில் குடிநுழைவு முத்திரைகளுக்குக் கீழே
விமான நிலையப் பெயர்களும்
இடங்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்ததால் அதிகாரிகள் அவரைத் தடுத்தனர்.

கடப்பிதழில் எழுதக்கூடாது என்பது தமக்குத் தெரியாது என அவர் அதிகாரிகளிடம் கூறியதாய் AFP செய்தி நிறுவனம் தெரிவித்தது.

நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் விமான நிலையத்திலேயே இருக்க நேர்ந்தது. நேற்று (9 ஜனவரி) அவர் லண்டனுக்கு விமானம் வழி திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆதாரம் : AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்