இனி Coca-Colaவில் உண்மையான கரும்புச் சர்க்கரை: டிரம்ப்
வாசிப்புநேரம் -
(படம்: Jim WATSON / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் Coca-Cola பானங்களில் உண்மையான கரும்புச் சர்க்கரையைப் பயன்படுத்த அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
அது ஒரு நல்ல மாற்றம் என்று கூறிய திரு டிரம்ப் Coca-Cola நிறுவன அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
தற்போது Coca-Cola நிறுவனம் high-fructose corn syrup (HFCS) எனப்படும் சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரையைப் பானங்களில் பயன்படுத்துகிறது.
அமெரிக்கச் சுகாதார அமைச்சர் ராபர்ட் கென்னடி (Robert F. Kennedy Jr.) வெகுநாளாக அதைக் குறைகூறி வந்தார்.
1970களில் சோள விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட அரசாங்கத் தள்ளுபடிகளால் HFCS-இன் பயன்பாடு பிரபலமானது.
எனினும் HFCS-யைவிட கரும்புச் சர்க்கரை உடலுக்கு நல்லது என்று கூறிவிட முடியாது.
உடல் எடை, இதய ஆரோக்கியம் ஆகியவற்றின்மீது HFCS, கரும்புச் சர்க்கரை ஆகிய இரண்டின் பாதிப்பும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என ஆய்வு கூறுகிறது.

ஆதாரம் : AFP