Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பெலரூஸில் அணுவாயுதங்களை நிறுத்திவைக்கத் திட்டமிடும் ரஷ்யா - கண்டித்த அமெரிக்கா

வாசிப்புநேரம் -
ரஷ்யா, பெலரூஸில் அணுவாயுதங்களை நிறுத்திவைக்கத் திட்டமிடுவதை அமெரிக்கா வன்மையாகக் கண்டித்துள்ளது.

மாஸ்கோ அணுவாயுதத்தைப் பயன்படுத்தத் தயாராகி வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று அது தெரிவித்தது.

வாஷிங்டன் அதன் அணுவாயுத நிலைப்பாட்டை மாற்றுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் மெத்தியு மில்லர் (Matthew Miller) தெரிவித்தார்.

பெலரூஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லுக்கஷென்கோ (Alexander Lukashenko) தமது நாட்டின் எல்லைக்குள் ரஷ்யா ஆயுதங்களைக் கொண்டுவருவதை உறுதிசெய்தார்.

உக்ரேனியப் பூசலில் அது மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

ரஷ்ய-உக்ரேனியப் போர் முடிவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை; வெற்றிபெற்றுவிட்டதாக இரு தரப்புமே கூறமுடியாத நிலையில் உள்ளன; சமரச முயற்சிகளும் இடம்பெறவில்லை என்கின்றனர் கவனிப்பாளர்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்