Skip to main content
தீயணைப்பு நுரையில் ஆபத்தான ரசாயனம்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தீயணைப்பு நுரையில் ஆபத்தான ரசாயனம்? -இழப்பீடு வழங்கும் நிறுவனம்

வாசிப்புநேரம் -
தீயணைப்பு நுரையில் ஆபத்தான ரசாயனம்? -இழப்பீடு வழங்கும் நிறுவனம்

REUTERS/Nicholas Pfosi/File Photo/File Photo

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்காவின் 3M நிறுவனம் உடல்நலப் பாதிப்பு தொடர்பாக வழக்குத் தொடுத்தவர்களுக்கு 7.35 பில்லியன் டாலர் (சுமார் 9.4 பில்லியன் வெள்ளி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

நிறுவனம் தயாரித்த தீயணைப்பு நுரையில் உள்ள PFAS ரசாயனங்களால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக 100,000க்கும் அதிகமானோர் வழக்குத் தொடுத்திருந்தனர்.

PFAS எனப்படும் ரசாயனங்கள் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

நீண்டகாலம் அழியாமல் இருக்கும் தன்மை இந்த ரசாயனங்களுக்கு இருப்பதால் அவை 'Forever Chemicals' என்று அழைக்கப்படுகின்றன.

ஒன்பது ஆண்டுக்குள் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று நிறுவனம் கூறியது.

ஏற்கனவே 2024ஆம் ஆண்டு, தண்ணீரில் உள்ள PFAS ரசாயனங்களை அகற்றவும் பரிசோதிக்கவும் 12.5 பில்லியன் டாலர் (சுமார் 16 பில்லியன் வெள்ளி)  வரை வழங்க 3M ஒப்புக்கொண்டது.

2025ஆம் ஆண்டு இறுதிக்குள் PFAS ரசாயனங்களின் உற்பத்தியை நிறுத்துவதாக நிறுவனம் தெரிவித்தது.

PFAS ரசாயனம் சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துவதால் 3M நிறுவனம் பல நாடுகளில் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்கிறது. 
 

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்