Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை உயர்த்துவது பற்றி முடிவெடுக்கக் காலக்கெடு நீட்டிப்பு

வாசிப்புநேரம் -
அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை உயர்த்துவது பற்றி முடிவெடுக்கக் காலக்கெடு நீட்டிப்பு

(படம்: AFP)

அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை உயர்த்துவது பற்றி முடிவெடுப்பதற்கான இறுதிநாளை அமெரிக்க நிதியமைச்சர் ஜேனெட் யெல்லன் (Janet Yellen) 4 நாள் நீட்டித்திருக்கிறார்.

முன்னதாக அதற்கான காலக்கெடு ஜூன் முதல் தேதியாக இருந்தது.

ஜூன் 5ஆம் தேதி வரை அரசாங்கத்திடம் போதுமான இருப்பு இருக்கக்கூடுமென திருவாட்டி யெல்லன் நாடாளுமன்றத்திற்குக் கடிதம் எழுதினார்.

கடன் உச்சவரம்பை உயர்த்துவது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகளும் மக்களவை குடியரசுக் கட்சியினரும் விரைவில் இணக்கம் காண்பர் என்று நம்பப்படுகிறது.

அவர்களுக்கு இடையே இணக்கம் ஏற்படாதது முடிவெடுப்பதில் முட்டுக்கட்டையாக இருக்கிறது.

காலக்கெடு நீட்டிக்கப்பட்டது முட்டுக்கட்டையின் தீவிரத்தைக் குறைக்கவில்லை என்று திருவாட்டி யெல்லன் எச்சரித்தார்.

ஜூன் மாதத்தின் முதல் 2 நாள்களில் மத்திய அரசாங்கம் சுமார் 130 பில்லியன் டாலரைத் திரும்பச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்