ஈரான் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்துவிட்டது: அமெரிக்கா
வாசிப்புநேரம் -
படம்: Kent NISHIMURA / AFP
அமெரிக்கா, ஈரான் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளது.
அதேவேளை ஹோர்முஸ் நீரிணையில் ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அது கூறுகிறது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio), Operation Epic Fury நடவடிக்கை நிறைவடைந்து விட்டது; அதன் மூலம் உரியவற்றைச் சாதித்துவிட்டதாகக் கூறினார்.
அமெரிக்கா அமைதி வழியை விரும்புவதாகச் சொன்ன அவர், அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) ஓர் ஒப்பந்தத்தை விரும்புவதாகக் கூறினார்.
இதற்கிடையே அமெரிக்காவுடன் நியாயமான, விரிவான உடன்பாட்டை மட்டுமே விரும்புவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி (Abbas Araghchi) பெய்ச்சிங்கில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயைச் (Wang Yi) சந்தித்தபோது அதனைத் தெரிவித்தார்.
சீனா, ஈரானின் நெருங்கிய நட்பு நாடு என்று திரு அராக்ச்சி கூறினார். தற்போதுள்ள சூழலில் அந்த உறவு இன்னும் வலுவடையும் என்றார் அவர்.
ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் முக்கியமான நாடு சீனா. அதற்கு எதிரான அமெரிக்காவின் தடைகளை அது பொருட்படுத்துவதில்லை.
அதேவேளை சம்பந்தப்பட்ட இரு தரப்புகளும் சண்டை நிறுத்தத்தை மதித்து நடக்கும்படி சீனா தொடர்ந்து வலியுறுத்துகிறது.

ஆதாரம் : AGENCIES