கென்யாவில் அமெரிக்கர்களுக்கான இபோலா தனிமைப்படுத்தும் நிலையத்துக்கு எதிர்ப்பு
வாசிப்புநேரம் -
(படம்: REUTERS/John Muchucha)
கென்யாவில் அமெரிக்கக் குடிமக்களுக்காக அமைக்கப்படவிருந்த இபோலா தனிமைப்படுத்தும் நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் வெடித்துள்ளது.
நூற்றுக்கணக்கான கென்யா மக்கள் திரண்டு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அந்த நிலையம் அமெரிக்கர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து நாட்டினருக்கும் திறந்துவிடப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
கூட்டத்தினரைக் கலைக்க காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.
நான்யுகி நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அங்குள்ள லாய்கிபியா ஆகாயப் படைத் தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தனிமைப்படுத்தும் நிலையம் திறக்கப்படவிருந்தது.
அது பொதுச் சுகாதாரத்துக்குக் கேடு என்று தொடுக்கப்பட்ட வழக்கு விசாரிக்கப்படுகிறது. அதனால் கென்யாவின் உயர் நீதிமன்றம் நிலையத்தை இப்போதைக்குத் திறக்கவேண்டாம் என்று உத்தரவிட்டது.

ஆதாரம் : Reuters