Skip to main content
சவுதி அரேபியாவில் அமெரிக்கத் தூதரகத்தின்மீது தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சவுதி அரேபியாவில் அமெரிக்கத் தூதரகத்தின்மீது தாக்குதல்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தின்மீது ஈரான் தாக்கியதை அமெரிக்க அதிபர டோனல்ட் டிரம்ப் சாடியுள்ளார்.

அமெரிக்கத் தூதரகத்தின்மீது ஈரான் ஆளில்லா வானூர்தித் தாக்குதலை மேற்கொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், தூதரகக் கட்டடத்திலிருந்து புகை வெளியேறியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தூதரகம் சொன்னது.

ஈரானின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று திரு டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

இந்நிலையில் ரியாத், ஜித்தா, தஹ்ரன் (Dhahran) ஆகிய இடங்களில் இருக்கும் அமெரிக்கக் குடிமக்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூதரகம் தாக்கப்பட்டதால் தற்போது அங்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்