Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் COVID-19 நெருக்கடி நிலை வரும் மே மாதத்துடன் முடிவுபெறும்

வாசிப்புநேரம் -

அமெரிக்கா கோவிட்-19 நெருக்கடி நிலையை இவ்வாண்டு மே மாதத்துடன் முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

கடந்த மூவாண்டாக நெருக்கடி நிலை நடப்பிலிருந்தபோது கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன.

முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் ஆட்சியில் 2020ஆம் ஆண்டு தேசிய அவசரநிலையும் பொதுச் சுகாதார நெருக்கடி நிலையும் அறிமுகம் கண்டன.

அதிபர் ஜோ பைடன் அதிபரான பிறகும் அது தொடர்ந்தது.

நாடளாவிய அந்நிலை மே மாதம் 11ஆம் தேதிக்குப் பின்னர் ரத்து செய்யப்படும்.

கோவிட் மருந்து, மருத்துவக் காப்புறுதி, இதர அரசாங்க உதவிகள் போன்றவற்றுக்கு வழங்கப்பட்ட நிதி அதன் பிறகு முற்றாக நிறுத்தப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்