Skip to main content
ஈரான் போர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஈரான் போர் - நடப்பது என்ன?

வாசிப்புநேரம் -
ஈரான் போர் - நடப்பது என்ன?
படம்: Mohammed HUWAIS / AFP

ஈரான் போர் மூன்றாவது நாளை எட்டியிருக்கிறது.

மத்திய கிழக்கு வட்டாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஈரான் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) மரணம் நிலைமையை இன்னும் மோசமாக்கியிருக்கிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை தாக்கிவருகின்றன.

ஈரான் பதிலடித் தாக்குதல் நடத்துகிறது.

நடப்பது என்ன?

Related article image
படம்: Anwar AMRO / AFP

லெபனானில் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா மோதல்

  • ஹிஸ்புல்லா என்பது ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சிக் குழு
  • ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் லெபனானில் பல இடங்களைத் தாக்கியிருக்கிறது.
  • அது பதிலடித் தாக்குதல் என்று இஸ்ரேல் கூறுகிறது.
Related article image
படம்: UGC / AFP

ஈரானில் தாக்குதல்களை விரிவுபடுத்தும் அமெரிக்கா

  • அமெரிக்கா ஈரானில் நூற்றுக்கணக்கான இடங்களைக் குறிவைத்துத் தாக்குகிறது.
  • இஸ்லாமிய புரட்சிப் பாதுகாப்புப் படையின் (IRGC) தலைமையகத்தை அழித்துவிட்டதாக அமெரிக்கா சொல்கிறது.
  • ஈரானில் இதுவரை 200க்கும் அதிகமானோர் மாண்டுவிட்டதாகத் தகவல்.
Related article image
படம்: Sahar AL ATTAR / AFP

ஈரான் பதிலடி

  • இஸ்ரேல் நகரங்களில் சிலர் மாண்டதாகவும் சிலர் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வளைகுடா நாடுகளிலும் தாக்குதல்கள்; ஓமான் துறைமுகத்தை இரண்டு ஆளில்லா வானுர்திகள் தாக்கியுள்ளன. ஒரு வெளிநாட்டு ஊழியர் காயம்.
  • ஹோர்முஸ் (Hormuz) நீரிணையில் கப்பல்கள் தாக்கப்பட்டன. எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
Related article image
படம்: Mandel NGAN / AFP

பழிவாங்குவது உறுதி: டிரம்ப்

  • போரில் 3 அமெரிக்கர்கள் மாண்டனர்; ஐவர் காயமுற்றனர்.
  • பழிவாங்குவது உறுதி என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
  • குண்டுவீச்சு 4 வாரங்களுக்குத் தொடரும் என்று டிரம்ப் சொல்கிறார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்