Skip to main content
ஈரானுக்குப் போன கப்பலைத் தாக்கிய அமெரிக்கா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஈரானுக்குப் போன கப்பலைத் தாக்கிய அமெரிக்கா

வாசிப்புநேரம் -
ஈரானுக்குப் போன கப்பலைத் தாக்கிய அமெரிக்கா

X/United States Central Command

வெளியீடு : 03 Jun 2026 09:26AM புதுப்பிப்பு : 03 Jun 2026 12:02PM

அமெரிக்க ராணுவம் ஈரானை நோக்கிச் சென்றுகொண்டிருந்த எண்ணெய்க் கப்பலைத் தாக்கியிருக்கிறது.

கப்பலை நோக்கி Hellfire ரக ஏவுகணை பாய்ச்சப்பட்ட காணொளியை அமெரிக்க ராணுவத்தின் மத்தியத் தளபத்தியம் வெளியிட்டது.

போஸ்ட்வானா (Botswana) கொடி ஏந்திய கப்பலின் இயந்திர அறை குறிவைக்கப்பட்டதாகவும் அது செயலிழந்ததாகவும் தளபத்தியம் தெரிவித்தது.

24 மணி நேரத்தில் பல முறை விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளைக் கப்பல் சிப்பந்திகள் புறக்கணித்ததாக மத்தியத் தளபத்தியத்தின் அறிக்கை குறிப்பிட்டது.

ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிடத் தொடங்கியதிலிருந்து அமெரிக்க ராணுவம் தாக்கியிருக்கும் ஆறாவது கப்பல் இது.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்