ஈரான் போர் - அதிபர் டிரம்ப்பின் அதிகாரத்தைக் கட்டுபடுத்தும் தீர்மானம் நிறைவேறியது
வாசிப்புநேரம் -
(படம்: Kent NISHIMURA / AFP)
அமெரிக்க மக்களவை ஈரான் மீது போர்தொடுக்கும் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் (Donald Trump) அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
போர் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் அந்தத் தீர்மானத்தை ஜனநாயகக் கட்சி கொண்டு வந்தது.
அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினர் சிலரும் அதை ஆதரித்தனர்.
215க்கு 208 என்ற வாக்கு எண்ணிக்கையில் தீர்மானம் நிறைவேறியது.
தீர்மானத்தின்படி, திரு டிரம்ப் நாடாளுமன்ற அனுமதியின்றி ஈரான் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது.
அது நடப்புக்கு வர செனட்சபையின் ஒப்புதலும் தேவை.
இதற்கிடையே அமெரிக்கப் போர் அமைச்சு, வெளியுறவு அமைச்சு, அனைத்துலக வளர்ச்சி அமைப்பு ஆகியவற்றின் அதிகாரிகள் ஈரானுக்கு எதிரான அமெரிக்க ராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டு விசாரணை நடத்தவுள்ளனர்.

ஆதாரம் : Reuters