Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"தெளிவான உத்தி இல்லாத போர்": டோனல்ட் டிரம்ப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த மக்களவை தீர்மானம்

வாசிப்புநேரம் -
"தெளிவான உத்தி இல்லாத போர்": டோனல்ட் டிரம்ப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த மக்களவை தீர்மானம்

கோப்புப் படம்: AFP

அமெரிக்க மக்களவை ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

தீர்மானத்துக்கு ஆதரவாக 215 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

அவர்களில் நால்வர் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினர்.

எதிர்த்து 208 பேர் வாக்களித்தனர்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அமெரிக்க அதிபரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

ஜனநாயகக் கட்சியினர் மக்களவையில் தீர்மானத்தை முன்வைத்தனர்.

அதிபர் டிரம்ப் ஈரான் பூசலில் ராணுவ பலத்தைப் பயன்படுத்த மக்களவையின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்பது அந்தத் தீர்மானம்.

எந்தவொரு தெளிவான உத்தியுமின்றி அமெரிக்கா ஈரான்மீது போர் தொடுத்தது என்பது அவர்களின் வாதம்.

இதனால் அமெரிக்காவில் செலவுகள் அதிகரித்துள்ளதாக ஜனநாயகக் கட்சியினர் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்காகவே போர் தொடங்கப்பட்டது என்கிறது டிரம்ப் நிர்வாகம்.

ஈரான் அணுவாயுதம் தயாரிப்பதைத் தடுக்க அதுவே வழி என்றும் நிர்வாகம் சுட்டியது.

மக்களைவில் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அதை நடைமுறைப்படுத்த செனட் சபையின் ஒப்புதல் தேவை.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்