விளையாட்டாகக் கதவைத் தட்டிய சிறுவர் சுட்டுக்கொலை
வாசிப்புநேரம் -
(படம்: AP Photo/David J. Phillip)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்காவில் கேலி செய்த 11 வயது சிறுவரைச் சுட்டுக் கொன்றதாக ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் ஹூஸ்டன் நகரில் நேற்று நடந்தது.
காவல்துறை 42 வயது கோன்சாலோ லியோன் ஜூனியரைக் (Gonzalo Leon Jr) கைது செய்தது.
மாண்ட சிறுவர் ஜூலியன் குஸ்மான் (Julian Guzman) கேலி செய்யும் நோக்கத்தோடு கோன்சாலோவின் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டு ஓடினார்.
குஸ்மானும் இன்னொரு சிறுவரும் அதனைத் தொடர்ந்து செய்ததால் கோன்சாலோ கோபம் கொண்டார். அவர் சிறுவர் குஸ்மானைச் சுட்டதாகச் சொல்லப்பட்டது.
வலியில் அழுத குஸ்மான் பின்னர் உயிரிழந்தார்.
காவல்துறை அதிகாரிகள் கோன்சாலோவின் வீட்டில் சுமார் 20 துப்பாக்கிகளைக் கண்டுபிடித்தனர்.
அமெரிக்காவில் கேலி விளையாட்டுகள் அவ்வப்போது அசம்பாவிதத்தில் முடிவந்துண்டு.
கேலி விளையாட்டுகள் ஆபத்தானவை; அவற்றில் ஈடுபட வேண்டாம் என்று காவல்துறை ஏற்கனவே எச்சரித்துள்ளது.

ஆதாரம் : AP