Skip to main content
அமெரிக்காவில் தொடரும் ஆர்ப்பாட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அமெரிக்காவில் தொடரும் ஆர்ப்பாட்டம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடிநுழைவு அமலாக்க நடவடிக்கைகளை எதிர்த்து நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சொற்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தி மக்கள் ஆர்ப்பரித்தனர்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அத்துமீறியிருப்பதாக மக்கள் சினம் கொண்டனர். இனப் பாகுபாடு, ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலுவாக எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர். அரசாங்கம் அதன் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்கவேண்டும்; சர்வாதிகாரக் கொள்கைகளுக்கு முட்டுக்கட்டை போடவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். வேறு மொழி பேசுவதால் தாக்கப்படுவது;
அதிகாரத்தில் உள்ளவர்களைப் போல் இல்லாததால் வெறுப்பது ஆகியவை மிகவும் தவறான செயல்கள் என்று மக்கள் கூறினர். அமெரிக்கக் குடிமக்களைத் தற்காக்கவே ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியுள்ளனர் என்றும், அவர்களுக்கு எதிராகப் போரிடுவதற்கு இல்லை என்றும் அவர்கள் கூக்குரலிட்டனர்.

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்