Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானி மீதான மோசடி, லஞ்சக் குற்றச்சாட்டுகள் தள்ளுபடி

வாசிப்புநேரம் -
இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானி மீதான மோசடி, லஞ்சக் குற்றச்சாட்டுகள் தள்ளுபடி

படம்: Reuters

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானி மீதான மோசடி, லஞ்சக் குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அமெரிக்க நீதித்துறை இந்த வழக்கைத் தொடர வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறது.

2024ஆம் ஆண்டு சூரிய மின்சக்தித் திட்ட ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் லஞ்சம் வழங்கியதாக அதானி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

வழக்கைத் தள்ளுபடி செய்தால் அமெரிக்காவில்
10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய அதானி தயாராய் இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

வழக்கைத் தள்ளுபடி செய்ய அமெரிக்க நீதித்துறை எடுத்த முடிவில் அது தாக்கத்தை ஏற்படுத்தியதா என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

இறுதியில் அது அரசாங்கத் தரப்பின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான அதானி குழுமம் துறைமுகங்கள், சிமெண்ட் ஆலைகள், ஊடக நிறுவனங்கள் உள்ளிட்ட பல துறைகளில் செயல்பட்டு வருகிறது.

வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிமன்ற முடிவை வரவேற்பதாகக் கௌதம் அதானி தெரிவித்தார்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்