Skip to main content
பாலியல் துன்புறுத்தல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பாலியல் துன்புறுத்தல் - அதிபர் டிரம்ப் $5 மில்லியன் தர உத்தரவு

வாசிப்புநேரம் -
பாலியல் துன்புறுத்தல் - அதிபர் டிரம்ப் $5 மில்லியன் தர உத்தரவு

படம்: AP Photo/Eduardo Munoz Alvarez

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்க அதிபர் டோனல்ட டிரம்ப் (Donald Trump) முன்னாள் செய்தியாளர் E ஜீன் கேரலுக்கு (E. Jean Carroll) 5 மில்லியன் டாலர் (6.5 மில்லியன் வெள்ளி) இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாட்டி கேரலைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, அவருக்கு எதிராக அவதூறு பரப்பியது ஆகிய குற்றங்களைத் திரு டிரம்ப் புரிந்ததாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு மே மாதம் திரு டிரம்ப் பாலியல் துன்புறுத்தலுக்கு 2 மில்லியன் டாலரும் அவதூறு பரப்பியதற்கு 3 மில்லியன் டாலரும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிரப்பட்டது.

தீர்ப்புக்கு எதிராகத் திரு டிரம்ப் மேல்முறையீடு செய்திருந்தார்.

அமெரிக்க உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டை நிராகரித்தது.

1996ஆம் ஆண்டு நியூயார்க் கடைத்தொகுதியில் திரு டிரம்ப் தம்மைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகத் திருவாட்டி கேரல் 2019ஆம் ஆண்டு குற்றஞ்சாட்டினார்.

திருவாட்டி கேரலுக்கு இப்போது வயது 82.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்