Skip to main content
கலிபோர்னியாவில் ஆர்ப்பாட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கலிபோர்னியாவில் ஆர்ப்பாட்டம் - நீதிமன்றத்தில் போராட்டம்

வாசிப்புநேரம் -
கலிபோர்னியாவில் ஆர்ப்பாட்டம் - நீதிமன்றத்தில் போராட்டம்

(படம்: Apu GOMES / AFP)

கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் (Gavin Newsom), ராணுவ வீரர்களை நகரில் பணியமர்த்துவதற்குத் தடை விதிக்கும்படி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கலிபோர்னியா ஆர்ப்பாட்டம் இப்போது நீதிமன்றப் போராட்டமாக மாறுகிறது.

அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாத சட்டவிரோதக் குடியேறிகள் மீது குடிநுழைவு அதிகாரிகள் நடத்தும் சோதனைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.

நிலவரத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) ஆயிரக்கணக்கான தேசியப் பாதுகாப்புப் படைகளையும் கூடுதலாக 700 ராணுவச் சிறப்புப் படையினரையும் அனுப்ப உத்தரவிட்டார்.

அந்த முடிவை ஆளுநர் நியூசம் சாடியுள்ளார்.

பயிற்சி பெற்ற போர் வீரர்களைச் சாலைப் போராட்டங்களைக் கையாள அனுப்புவது இதற்கு முன்னர் நடந்திராத ஒன்று என்று அவர் சுட்டினார்.

அமெரிக்காவின் ஜனநாயகத்தின் அடிப்படைக்கு அது மிரட்டலாய் அமைவதாய்த் திரு நியூசம் சொன்னார்.

லாஸ் ஏஞ்சலிஸ் நகர மேயர் கேரன் பாஸ் (Karen Bass), குடியேறிகள்மீது நடத்தப்படும் தொடர்சோதனைகளை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாசவேலையையும் திருட்டையும் நிறுத்துவதற்காக அவர் லாஸ் ஏஞ்சலிஸில் இரவு நேர ஊரடங்கு விதித்துள்ளார்.

அரசாங்கக் கட்டடங்களைப் பாதுகாப்பதற்கும் உள்ளூர்ச் சட்ட அதிகாரிகளுக்கு உதவுவதற்கும் கூடுதல் அதிகாரிகளை அனுப்ப உத்தரவிட்டதாய் டிரம்ப் நிர்வாகம் சொன்னது.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்