Skip to main content
சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க ஆயுதம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க ஆயுதம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்கா மீண்டும் சவுதி அரேபியாவுக்கு ஆயுத விற்பனையைத் தொடங்கவிருக்கிறது.

ஏமனில் உள்ள ஹௌதி கிளர்ச்சியாளர்களுடன் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக 2021இல் சவுதி அரேபியாவுக்கான ஆயுத விற்பனையை அமெரிக்கா நிறுத்தி வைத்தது.

மீண்டும் ஆயுத விற்பனையைத் தொடர்வது குறித்து அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் சென்ற வாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விளக்கமளித்துள்ளது.

ஆகாயத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஆயுதங்களை சவுதி அரேபியாவுக்கு வழங்குவதற்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூறியது.

சூழலுக்கு ஏற்பப் புதிய ஆயுதப் பரிவர்த்தனை குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றும் அது சொன்னது.

அடுத்த வாரமே சவுதி அரேபியாவுக்கான ஆயுத விற்பனை தொடங்கலாம் என்று Reuters செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்