பயணிகளின் கைப்பையிலிருந்து திருட்டு - பிடிபட்ட அமெரிக்க விமான நிலைய ஊழியர்கள்
வாசிப்புநேரம் -

(படம்: Twitter / @MikeSington)
அமெரிக்காவின் மயாமி அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகளின் பைகளிலிருந்து ஊழியர்கள் பணம் திருடுவதைப் போல் காட்டும் காணொளி வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு ஜூலை மாதம், சந்தேகத்துக்குரிய ஊழியர்கள் கைது செய்யப்பட்டதாக New York Post செய்தி நிறுவனம் கூறியது.
இந்த ஆண்டு ஜூன் 29ஆம் தேதி ஊழியர்கள் பயணிகளின் பைகளிலிருந்து குறைந்தது 600 டாலரைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
20 வயது ஜோசு கோன்சலஸ் (Josue Gonzalez), 33 வயது லபர்ரியஸ் வில்லியம்ஸ் (Labarrius Williams) ஆகியோர் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பைகளை X-ray கருவிக்குள் விடுவதற்கு முன்பு அவர்கள் பணத்தைத் திருடுவது காணொளியில் தெரிகிறது.
கோன்சலஸ் அரசாங்க வழக்கறிஞர்கள் வழங்கிய வழக்கை ஒத்திவைக்கும் திட்டத்தில் சேர்ந்ததாக New York Times கூறியது.
திட்டம் முடிவுக்கு வந்த பின் அவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்படலாம்.
அதோடு அவர் பாதிக்கப்பட்டோருக்கு 700 டாலர் செலுத்த வேண்டும்.
வில்லியம்ஸ் அந்தத் திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அவரின் வழக்கு விசாரணை அடுத்த மாதம் நடைபெறும்.