Skip to main content
அமெரிக்க இடைத்தவணைத் தேர்தல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அமெரிக்க இடைத்தவணைத் தேர்தல் - அப்படி என்றால்?

வாசிப்புநேரம் -
அமெரிக்க இடைத்தவணைத் தேர்தல் - அப்படி என்றால்?

படம்: Brendan SMIALOWSKI / AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி இடைத்தவணைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் (Donald Trump) எஞ்சிய பதவிக்காலத்தில் இந்தத் தேர்தல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

இடைத்தவணைத் தேர்தல் என்றால் என்ன?

அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்.

அதிபரின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள்.

அந்த நான்காண்டுப் பதவிக்காலத்தின் நடுவில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் இடைத்தவணைத் தேர்தல் என்று அழைக்கப்படுகிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் மக்களவை, செனட் சபை என இரண்டு அவைகள் உள்ளன.

அவற்றை எந்தக் கட்சி கட்டுப்படுத்தும் என்பதைத் தேர்தல் தீர்மானிக்கும்.

மக்களவையின் 435 இடங்களுக்கும் செனட் சபையின் 100 இடங்களில் 35க்கும் தேர்தல் நடைபெறும்.

பல மாநிலங்களில் ஆளுநர் உள்ளிட்ட மாநில அளவிலான பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறும்.

முக்கியத் தேர்தல் விவகாரங்கள் என்னென்ன?

உணவு, வீடு, எரிபொருள், சுகாதாரச் செலவுகள் அதிகரித்திருப்பது வாக்காளர்களின் முக்கியக் கவலையாக உள்ளது.

குடிநுழைவுக் கட்டுப்பாடுகள், டிரம்ப்பின் வர்த்தக வரிகள், AI தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துவது ஆகியவையும் விவாதிக்கப்படுகின்றன.
Related article image
படம்: Kent NISHIMURA / AFP
யாருக்கு வெற்றி வாய்ப்பு?

இடைத்தவணைத் தேர்தல்களில் அதிபரின் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளதை வரலாறு காட்டுகிறது.

அக்டோபர் தொடக்கத்தில் டிரம்ப்பின் செயல்பாட்டுக்கு 37 விழுக்காட்டினர் மட்டுமே ஆதரவு தெரிவித்ததாகக் கருத்துக்கணிப்பு சொல்கிறது.

ஆனால் தொகுதி எல்லைகளில் செய்யப்பட்ட மாற்றங்களால் இம்முறை போட்டி மேலும் கடுமையாகியுள்ளது.

டிரம்ப்புக்கு என்ன பாதிப்பு?

ஜனநாயகக் கட்சி ஓர் அவையைக் கைப்பற்றினால் டிரம்ப்பின் திட்டங்களுக்குத் தடைகள் ஏற்படலாம்.

அவருடைய நிர்வாகம் குறித்த விசாரணைகளையும் எதிர்க்கட்சியினர் முன்னெடுக்க முடியும்.

குடியரசுக் கட்சி இரு அவைகளையும் தக்கவைத்தால் டிரம்ப்பின் திட்டங்களை நிறைவேற்றுவது எளிதாக இருக்கும்.

தற்போது இரு அவைகளிலும் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியே பெரும்பான்மை வகிக்கிறது.

ஆனால் அதன் பெரும்பான்மை குறைவாக உள்ளது.

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி ஓர் அவையைக் கைப்பற்றினால்கூட சட்டங்களை நிறைவேற்றுவதில் டிரம்ப்புக்குச் சிக்கல் ஏற்படலாம்.
ஆதாரம் : Others/BBC

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்