Skip to main content
குடியேறிகளை இந்தியாவுக்குத் திருப்பியனுப்பும் அமெரிக்கா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

குடியேறிகளை இந்தியாவுக்குத் திருப்பியனுப்பும் அமெரிக்கா

வாசிப்புநேரம் -
குடியேறிகளை இந்தியாவுக்குத் திருப்பியனுப்பும் அமெரிக்கா

(படம்: Dept. of Defense/U.S. Army Sgt. 1st Class Nicholas J. De La Pena/Handout via REUTERS

அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று குடியேறிகளை இந்தியாவுக்குத் திருப்பியனுப்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தின்கீழ் உள்ள ராணுவப் போக்குவரத்து விமானங்கள் செல்லக்கூடிய ஆக அதிகமான தூரம் அது என்று கூறப்பட்டது.

குடியேறிகள் தொடர்பான அதிபர் டிரம்ப்பின் கொள்கைகளை நிறைவேற்ற அவ்வாறு செய்யப்படுவதாக நம்பப்படுகிறது.

இதுவரை அமெரிக்க ராணுவ விமானங்கள் குவாட்டமாலா (Guatemala), பெரு (Peru), ஹொண்டுராஸ் (Honduras) ஆகிய இடங்களுக்குச் சென்றுள்ளன.

அடுத்த வாரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திரு டிரம்ப்பைச் சந்திக்கவுள்ளார்.

திரு டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பின்னர் திரு மோடி வெள்ளை மாளிகைக்குப் பயணம் மேற்கொள்வது இது முதல்முறையாகும்.

வர்த்தகம், எரிசக்தி, தற்காப்பு உள்ளிட்ட விவகாரங்களில் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்