Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு அமெரிக்கா 170 மில்லியன் டாலர் மனிதாபிமான உதவி

வாசிப்புநேரம் -
ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு அமெரிக்கா 170 மில்லியன் டாலர் மனிதாபிமான உதவி

(கோப்புப் படம்: AP Photo/Bernat Armangue)

மியன்மார் ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்காகக் அமெரிக்கா கூடுதலாக 170 மில்லியன் டாலருக்கு அதிகமான மனிதாபிமான உதவிகளை அறிவித்துள்ளது. 

மியன்மாருக்கு வெளியே பங்களாதேஷ் போன்ற இடங்களில்  உள்ள ரொஹிஞ்சா மக்களுக்கும் அந்த உதவி சென்றுசேரும். 

2017 இலிருந்து ரொஹிஞ்சா அகதிகளுக்காக 1.9 பில்லியன் டாலர் உதவி வழங்கியிருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) கூறினார். 

பங்களாதேஷில் ரொஹிஞ்சா அகதிகள் பிரச்சினைக்குத் தீர்வு காண அந்நாட்டு அரசாங்கத்துடன் பணியாற்றி வருவதாக அவர் சொன்னார். 

பங்களாதேஷில் உள்ள முகாம்களில் மில்லியனுக்கும் அதிகமான ரொஹிஞ்சா அகதிகள் சுகாதாரமற்ற சூழலில் வசித்து வருகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa