மரண தண்டனையின் போது பிழைத்த குற்றவாளி இப்போது செயற்கை சுவாசக்கருவியில்
வாசிப்புநேரம் -
(படம்: Handout / TENNESSEE DEPARTMENT OF CORRECTION / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்காவில் இரு முறை நச்சு ஊசி செலுத்தப்பட்ட போதும் உயிர்பிழைத்த மரண தண்டனைக் குற்றவாளி கிறிஸ்டா பைக்கிற்கு (Christa Pike) தற்போது செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டுள்ளது.
அந்தத் தகவலை அவருடைய வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
கடந்த வியாழக்கிழமை (1 அக்டோபர்) டென்னஸி (Tennessee) மாநிலத்தில் 50 வயது பைக்கிற்கு இரண்டு முறை பென்டோபார்பிட்டல் (Pentobarbital) எனப்படும் நச்சு ஊசி செலுத்தப்பட்டது.
ஆனால் இரு முறையும் அவர் உயிர் பிழைத்தார்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஆனால் நேற்று அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
மரண தண்டனை முயற்சி தோல்வியடைந்ததால் தண்டனையைக் குறைக்கவேண்டும் என்று பைக்கின் வழக்கறிஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தண்டனையை நிறைவேற்றும் அதிகாரிகள் ஒழுங்கான முறையில் ஊசியைக் குத்தவில்லை; குறைந்தது 7 ஊசிகளைப் பயன்படுத்தினர் என்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
பைககிற்கு ஏற்கனவே thrombocytosis எனும் ரத்த நோய் இருப்பதால் இத்தகைய தண்டனை அவருக்குத் தேவையில்லாத வலியைக் கொடுக்கும் என்று வழக்கறிஞர்கள் முன்னர் வாதாடியிருந்தனர்.
மரண தண்டனை முயற்சி இரண்டு முறை தோல்வியில் முடிந்ததால் இவ்வாண்டு இறுதிவரை டென்னஸியில் வேறு எந்த மரண தண்டனையும் நிறைவேற்றப்பட மாட்டாது என்று மாநில ஆளுநர் அறிவித்தார்.

ஆதாரம் : Others/BBC