ஈரான் துறைமுக முற்றுகையை மீற முயன்ற கப்பலை அமெரிக்கப் போர் விமானம் சுட்டது
வாசிப்புநேரம் -
படம்: REUTERS/US Navy
அமெரிக்கக் கடற்படைப் போர் விமானம், ஓர் எண்ணெய்க் கப்பலைச் சுட்டு முடக்கியிருக்கிறது.
ஈரான் துறைமுக முற்றுகையை அந்தக் கப்பல் மீற முயன்றதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.
M/T Hasna எனும் அந்தக் கப்பல் கடல்பகுதியில் தடை எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை.
அதனால் அமெரிக்கப் போர் விமானம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
கப்பலின் இயந்திரப் பாகம் சேதமடைந்தது.
ஈரான் துறைமுகங்களில் அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்து நடப்பில் உள்ளதாக அமெரிக்க மத்தியத் தளபத்தியம் (CENTCOM) தெரிவித்தது.
ஈரான் துறைமுகங்களுக்குக் கப்பல்கள் செல்லவும் அங்கிருந்து கப்பல்கள் வெளியேறவும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.

ஆதாரம் : CNA