கலிபோர்னியாவில் 48 மணி நேரத்திற்குள் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு - 7 பேர் மரணம்

(படம்: Susana BATES / AFP)
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்துள்ளது.
பிள்ளைகள் முன்னிலையில் சக ஊழியர்கள் 7 பேரைக் கொன்ற சந்தேகத்தில் பண்ணை ஊழியர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
சான் பிரான்சிஸ்கோவின் சான் மடியோ பகுதியில் உள்ள பண்ணைகளில் அந்தச் சம்பவம் நடந்தது.
67 வயது சுன்லி ஸாவ் (Chunli Zhao) கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாகிச் சூட்டிற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை.
சம்பவத்தில் மாண்டோரும் காயமுற்றோரும் சீன இனத்தைச் சேர்ந்தவர்கள்.
லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடந்து 48 மணி நேரத்திற்குள் இந்தச் சம்பவம் நேர்ந்திருக்கின்றது.
லாஸ் ஏஞ்சலிஸ் துப்பாக்கிச் சூட்டில் மாண்டோர் எண்ணிக்கை 11 க்கு உயர்ந்துள்ளது.
-AFP