காஸா சண்டைநிறுத்தத்தில் சந்தேகம் உள்ளது: டிரம்ப்
வாசிப்புநேரம் -

(படம்: Jim Watson / AFP)
அமெரிக்க அதிபர் டிரம்ப், காஸா சண்டைநிறுத்த உடன்பாடு குறித்துச் சந்தேகம் எழுப்பியிருக்கிறார்.
அமைதி நிலைக்கும் என்பதற்குத் தம்மிடம் எந்த உத்தரவாதமும் இல்லை என்றார் அவர்.
வாஷிங்டனில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவைச் (Benjamin Netanyahu) சந்திப்பதற்கு ஒரு சில மணிநேரத்திற்கு முன்னர் அவர் அவ்வாறு கூறியுள்ளார்.
திரு டிரம்ப், மேலும் 2 நிர்வாக ஆணைகளைப் பிறப்பிப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அவற்றில் ஒன்று, ஐக்கிய நாட்டு மனித உரிமை மன்றத்திலிருந்து அமெரிக்காவை மீட்டுக்கொள்வது.
மற்றொன்று, காஸாவுக்கான ஐக்கிய நாட்டு நிவாரண அமைப்புக்கு எதிர்காலத்தில் கொடுக்கப்படவிருக்கும் நிதியைத் தடுத்துநிறுத்துவது.
காஸா சண்டைநிறுத்த உடன்பாட்டின் இரண்டாம் கட்டப் பேச்சு தொடங்கவிருக்கும் வேளையில் தமது அமெரிக்கப் பயணம் இடம்பெறுவதாகத் திரு நெட்டன்யாஹு சொன்னார்.
ஹமாஸ் வசமுள்ள எஞ்சிய பிணையாளிகள் இரண்டாம் கட்டத்தில் விடுவிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவது பற்றியும் விவாதிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
சண்டைநிறுத்தத்தின் முதற்கட்டம், சென்ற மாதம் (ஜனவரி) 19ஆம் தேதி நடப்புக்கு வந்தது.
அது 42 நாள் நீடிக்கும்.
பிணையாளிகள் - கைதிகள் பரிமாற்றம் ஏற்கெனவே 4 முறை இடம்பெற்றுள்ளது.

ஆதாரம் : Others