கிரீன்லந்தை இணைக்கத் தீவிர ஆர்வங்காட்டும் டிரம்ப்
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: REUTERS/Evelyn Hockstein)
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) கிரீன்லந்தை (Greenland) அமெரிக்காவுடன் இணைப்பதற்கான முயற்சிகளைத் தீவிரமாக்குகிறார்.
வெள்ளை மாளிகையில் நேட்டோ கூட்டணியின் தலைமைச் செயலாளர் மார்க் ரூட்டரைச் (Mark Rutte) சந்தித்துப் பேசினார் திரு டிரம்ப்.
அனைத்துலகப் பாதுகாப்பை விரிவுபடுத்த கிரீன்லந்தை இணைத்துக்கொள்வது முக்கியம் என்று அவரிடம் திரு டிரம்ப் கூறினார்.
கிரீன்லந்தை வசப்படுத்தும் யோசனையைத் திரு டிரம்ப் பலமுறை வெளியிட்டிருக்கிறார்.
அதைச் செயல்படுத்த நேட்டோவின் உதவி தேவைப்படலாம் என்றார் அவர்.
கிரீன்லந்தைக் கையகப்படுத்தும் திரு டிரம்ப்பின் யோசனையை அந்தத் தீவின் பதவி விலகும் பிரதமர் மூட் ஈகட் (Mute Egede) நிராகரித்தார்.
அமெரிக்க அதிபர் சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கிரீன்லந்தின் ஜனநாயகக் கட்சி கூறியது.
நேற்று முன்தினம் நடந்த நாடாளுமன்றத் (12 மார்ச்) தேர்தலில் அந்தக் கட்சி வெற்றிபெற்றது.
கிரீன்லந்து மக்களில் பெரும்பாலோர் தீவை அமெரிக்காவுடன் இணைக்க எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
கிரீன்லந்து அமைந்திருக்கும் இடத்தையும் அங்குள்ள வளங்களையும் அமெரிக்கா குறிவைப்பதாகத் தெரிகிறது.
உலகின் ஆகப்பெரிய தீவான கிரீன்லந்து சுமார் 300 ஆண்டுகளாக டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆதாரம் : Others