Skip to main content
சீனாவுக்கான வரி 80%
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சீனாவுக்கான வரி 80%-க்குக் குறைக்கப்படலாம் - டிரம்ப்

வாசிப்புநேரம் -
சீனாவுக்கான வரி 80%-க்குக் குறைக்கப்படலாம் - டிரம்ப்

(படம்: AP/Alex Brandon)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீனாவுக்கான வர்த்தக வரி குறைக்கப்படலாம் என்று அவரது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

சீனாவுக்கு விதிக்கப்பட்டுள்ள 145 விழுக்காட்டு வரியை 80 விழுக்காடுக்குக் குறைப்பது சரியாக இருக்கும் என்று அவர் கூறினார்.

எனினும் இறுதி முடிவெடுப்பதை நிதியமைச்சர் ஸ்கோட் பெஸ்ஸண்ட்டிடம (Scott Bessent) விடுவதாகத் திரு டிரம்ப் சொன்னார்.

திரு பெஸ்ஸண்ட்டும் வர்த்தகப் பேச்சு நடத்தும் அமெரிக்கத் தலைமை அதிகாரி ஜேமிசன் கிரியரும் (Jamieson Greer) சுவிட்சர்லந்தில் சீனத் துணைப் பிரதமர் ஹீ லிபெங்கைச் (He Lifeng) சந்திக்கவிருக்கின்றனர்.

அமெரிக்காவின் 145 விழுக்காட்டு வரிக்குப் பதிலடியாகச் சீனா அமெரிக்கப் பொருள்களுக்கு 125 விழுக்காட்டு வரி விதித்திருந்தது.

சீனாவுக்கான வர்த்தக வரியை அமெரிக்கா குறைப்பதற்கு முன் சீனா அமெரிக்கப் பொருள்கள்மீது விதித்த வரியைக் குறைக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்