Skip to main content
வெள்ளை மாளிகை சன்னலிலிருந்து வீசப்பட்ட பை... யாருடையது?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

வெள்ளை மாளிகை சன்னலிலிருந்து வீசப்பட்ட பை... யாருடையது?

வாசிப்புநேரம் -
வெள்ளை மாளிகை சன்னலிலிருந்து வீசப்பட்ட பை... யாருடையது?

படம்: AP/Alex Brandon

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெள்ளை மாளிகையின் சன்னலிலிருந்து கறுப்புப் பை வெளியே வீசப்படும் காணொளி செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் கூட்டத்தின்போது அந்தக் காணொளி குறித்து ஒருவர் திரு டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பினார்.

அந்தக் காணொளியைத் தம்மிடம் காட்ட சொன்ன திரு டிரம்ப், அதைப் பார்த்துவிட்டு செயற்கை நுண்ணறிவைக் கொண்டு உருவாக்கப்படும் காணொளி உண்மையானது போன்றே இருப்பதாகக் கூறினார்.

அது சற்று அச்சுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் அது உண்மையான காணொளி தான் என்று முன்பே வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்திவிட்டார்.

மேம்பாட்டுப் பணிகளின்போது குத்தகைக்காரர் சன்னல் வழி குப்பைகளை வீசியதாக அவர் விளக்கினார்.

வெள்ளை மாளிகையின் 2ஆவது மாடியில் அதிபர் இருக்ரும் பகுதியில் அந்தப் பணிகள் நடந்தன.
 
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்