Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

டிரம்ப் வழக்கில் தண்டனை - "சிறைத்தண்டனை, அபராதத்தை எதிர்நோக்கமாட்டார்"

வாசிப்புநேரம் -
அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பதவியேற்கவிருக்கும் திரு டோனல்ட் டிரம்ப் (Donald Trump) எந்தச் சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் எதிர்நோக்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரில் நடத்தப்பட்ட நீதிமன்ற வழக்கில் அவருக்கு நிபந்தனையில்லா தண்டனை விதிக்கப்பட்டது.

அதில் திரு டிரம்ப் காணொளி வழியாகக் கலந்துகொண்டார்.

உண்மையை மறைக்க ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்குப் (Stormy Daniels) பணம் கொடுத்ததற்காக அவர் மீது 34 குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்டன.

அதனைத் தாமதப்படுத்தத் திரு டிரம்ப் விண்ணப்பம் செய்திருந்தார்.

அவர் மீது குற்றச்சாட்டு பதிவாகும். ஆனால் அவரது தண்டனையில் எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்