Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"உக்ரேனுக்கு F-16 ரகப் போர் விமானங்களை அனுப்பவதாக இல்லை!" - அமெரிக்க அதிபர்

வாசிப்புநேரம் -
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரேனுக்கு F-16 ரகப் போர் விமானங்களை அனுப்பப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

ரஷ்யத் தாக்குதல்களிலிருந்து தனது ஆகாயவெளியைத் தற்காத்துக்கொள்ள அவற்றை அனுப்புமாறு உக்ரேன் மேற்கத்திய நட்பு நாடுகளைக் கேட்டு வருகிறது.

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு சோவித் யூனியனிடமிருந்து சுதந்திரம் கிடைப்பதற்கு முன் தயாரிக்கப்பட்ட போர் விமானங்களேயே உக்ரேன் தற்போது பயன்படுத்துகிறது.

அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் முதலிய நாடுகள் பிற ஆயுதங்களையும் உதவுகளையும் உக்ரேனுக்கு வழங்கி வருகின்றன.

அது வரவேற்கத்தக்கது என்றாலும் போர் விமானங்களும் அவசியமென உக்ரேனின் வெளியுறவுத் துணையமைச்சர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவைப் போன்றே ஜெர்மனியும் போர் விமானங்களைக் கொடுக்க மறுத்துவிட்டது.

லெப்பர்ட் 2 ரகக் கவச வாகனங்களை அனுப்பிவைக்க ஜெர்மனி அண்மையில்தான் உறுதியளித்திருந்தது.

இந்நிலையில் அந்நாட்டுப் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் உக்ரேனுக்கு வேறு ராணுவ உதவிகளைச் செய்வது பற்றி விவாதிப்பது தேவையற்றது எனக் கூறியுள்ளார்.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்