Skip to main content
"இது அமெரிக்க மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி!"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"இது அமெரிக்க மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி!" - டிரம்ப்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றுவிட்டதாகக் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

புளோரிடா மாநிலத்தில் அவர் தமது ஆதரவாளர்களைச் சந்தித்து உரையாற்றுகிறார்.

இதுபோன்ற அரசியல் வெற்றியை இந்த நாடு பார்த்ததே இல்லை என அவர் கூறினார்.

ஒவ்வொரு குடிமகனுக்காகவும் தாம் போராடவிருப்பதாக அவர் கூறினார்.

"இது அமெரிக்க மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. இதன் மூலம் அமெரிக்காவை மீண்டும் சிறப்பாக்கலாம்"

என்று திரு டிரம்ப் பகிர்ந்தார்.

அவருடன் மேடையில் அவரது மனைவி மெலேனியா டிரம்ப்பும் துணையதிபர் வேட்பாளர் JD வேன்ஸும் நிற்கின்றனர்.

திரு டிரம்ப் தமது பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

திரு டிரம்ப் அதிபர் தேர்தலின் வெற்றியாளர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

அதிபராவதற்கு அவர் 270 அதிபர் மன்ற வாக்குகளைப் பெற வேண்டும்.

அந்த எண்ணிக்கையைத் தொட திரு டிரம்ப்புக்கு இன்னும் நான்கு வாக்குகள் தேவை.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்