60 பொருளாதாரங்கள் மீது புதிய அமெரிக்க வரி?
அமெரிக்க வர்த்தகப் பேராளர் 60 பொருளாதாரங்கள் மீது புதிய வரி விதிப்பது குறித்த யோசனையை முன்வைத்திருக்கிறார்.
சீனா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ் போன்றவையும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
கட்டாய ஊழியர்களைப் பயன்படுத்தி பொருள்கள் தயாரிப்பதற்கு எதிராக அந்தப் பொருளாதாரங்கள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது.
அதன் தொடர்பில் அமெரிக்கா விசாரணை தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு வரி பற்றிய புதிய செய்தி வந்துள்ளது.
சீனா, வியட்நாம், தைவான், பிரிட்டன் உள்ளிட்ட 54 பொருளாதாரங்கள் நடவடிக்கை எடுப்பதில் தோல்வி கண்டதாக அமெரிக்கா கூறியது.
கனடா, மெக்சிக்கோ, பாகிஸ்தான் முதலிய 6 பொருளாதாரங்கள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறது அமெரிக்கா.
அந்த 60 பொருளாதாரங்கள் மீது 10 முதல் 12.5 விழுக்காடு வரை புதிய வரி விதிப்பது குறித்து அமெரிக்கா யோசிக்கிறது.