"அமெரிக்கா புதிய சண்டைநிறுத்த ஒப்பந்தத்தைப் பரிந்துரைக்கவில்லை"
வாசிப்புநேரம் -
படம்: REUTERS/Dawoud Abu Alkas
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்கா தலைமையிலான காஸா சண்டைநிறுத்தப் பரிந்துரையை ஹமாஸ் ஏற்றுக்கொண்டதாகக் கூறியதை வாஷிங்டன் நிராகரித்துள்ளது.
மத்தியக் கிழக்கு வட்டாரத்துக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கோப் (Steve Witkoff) முன்வைத்த புதிய உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்ததாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்தது.
அந்த உடன்பாட்டில் 70 நாள் சண்டை நிறுத்தம், இரண்டு தொகுதிகளாக 10 பிணைக்கைதிகளை விடுவிப்பது ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன.
ஆனால் அது தாம் பரிந்துரைத்த உடன்பாடு அல்ல என்று திரு விட்கோப் தெரிவித்தார்.
ஹமாஸுக்குப் புதிய ஒப்பந்தம் கொடுக்கப்படவில்லை என்றும் இதற்கு முன்னதாக முன்வைக்கப்பட்ட ஒப்பந்தத்தை அது ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் சொன்னார்.
எத்தனை பிணைக்கைதிகள் எப்போது விடுவிக்கப்படவேண்டும் ஆகிய விவரங்கள் இரு உடன்படிக்கைகளிலும் வேறுபட்டிருந்ததாகத் திரு விட்கோப் சுட்டினார்.
இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பின் கருத்துகளை நிராகரித்தது.
சண்டைநிறுத்தத்தை ஹமாஸ் மீறும் என்று கூறிய இஸ்ரேல், எஞ்சியுள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க அமைப்பு மறுக்கும் என்றும் கூறியது.

ஆதாரம் : Reuters