Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்யப் படையெடுப்புக்குப் பிறகு அமெரிக்க, ரஷ்ய, உக்ரேனிய வெளியுறவு அமைச்சர்களின் முதல் சந்திப்பு

வாசிப்புநேரம் -
ரஷ்யப் படையெடுப்புக்குப் பிறகு அமெரிக்க, ரஷ்ய, உக்ரேனிய வெளியுறவு அமைச்சர்களின் முதல் சந்திப்பு

(Evan Schneider / UNITED NATIONS / AFP)

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் (Sergei Lavrov) ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் அமெரிக்க, உக்ரேனிய வெளியுறவு அமைச்சர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். 

உக்ரேனில் ஆக்கிரமிப்பு தொடங்கியபிறகு ரஷ்ய, அமெரிக்க, உக்ரேனிய வெளியுறவு அமைச்சர்கள் முதன்முறையாகப் பாதுகாப்பு மன்றத்தில் சந்தித்தனர்.   

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken), சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi) உள்ளிட்டோர் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் பங்கேற்றனர். 

15 உறுப்பினர்கள் கொண்ட மன்றத்தில் மற்றவர்கள் உரையாற்றியதைத் திரு லாவ்ரோவ் செவிகொடுத்துக் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. 

உக்ரேன் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றம் இந்த ஆண்டு மட்டும் 20 முறை கூடியுள்ளது. 

என்றாலும் அதன்மூலம் ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்று குறைகூறப்படுகிறது. 

நிரந்தர உறுப்பு நாடு என்ற நிலையில் இருப்பதால் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகிய நாடுகளைப் போல ரஷ்யாவும் ரத்து அதிகாரத்தைக் கைவசம் வைத்திருக்கிறது. 

இதற்கிடையே, உக்ரேன், ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் இருப்பதாகவும் உக்ரேனில் வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்களைக் கீவ் வெளிப்படையாகத் துன்புறுத்துவதாகவும் திரு. லாவ்ரோவ் சாடினார். 

அத்தகைய செயல்களால் படையெடுப்பு தவிர்க்க முடியாமல் போய்விட்டது என்று அவர் சொன்னார். 

இந்நிலையில் ரஷ்ய அரசதந்திரிகள் மலையளவு பொய் கூறுவதாக உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa