Skip to main content
அமெரிக்காவில் பள்ளிவாசலில் துப்பாக்கிச்சூடு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அமெரிக்காவில் பள்ளிவாசலில் துப்பாக்கிச்சூடு - 2 சந்தேக நபர்கள் உட்பட 5 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
அமெரிக்காவில் பள்ளிவாசலில் துப்பாக்கிச்சூடு - 2 சந்தேக நபர்கள் உட்பட 5 பேர் மரணம்

(படம்: Carlos A. Moreno / GETTY IMAGES NORTH AMERICA / AFP)

வெளியீடு : 19 May 2026 09:45AM புதுப்பிப்பு : 19 May 2026 11:16AM
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் டியாகோ (San Diego) இஸ்லாமிய நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் மாண்டனர்.

இரு பதின்ம வயது இளையர்கள் பள்ளிவாசலுக்கு வெளியே துப்பாக்கியால் சுட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதில் 3 ஆடவர்கள் மாண்டனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் பாதுகாவலர்.

சந்தேக நபர்கள் இருவரும் பின்னர் ஒரு காரில் மாண்டுகிடந்தனர்.

17, 19 வயதுடைய அந்த இரு ஆடவர்களும் தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டு மாண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

பள்ளிவாசல் வளாகத்தில் செயல்படும் பள்ளியில் இருந்த அனைத்துக் குழந்தைகளின் பாதுகாப்பையும் அதிகாரிகள் உறுதிசெய்தனர்.

சம்பவம் வெறுப்புக் குற்றமாகக் கருதப்படுவதாகவும் விசாரணை நடத்தப்படுவதாகவும் சான் டியாகோ காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்