Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"உக்ரேனுக்கு இன்னும் அதிகமான ஆயுதங்களை அனுப்பி சீனாவுக்குச் செய்தி சொல்லுங்கள்" - அமெரிக்க அதிபரைக் கேட்டுக்கொண்ட மூத்த செனட்டர்

வாசிப்புநேரம் -
"உக்ரேனுக்கு இன்னும் அதிகமான ஆயுதங்களை அனுப்பி சீனாவுக்குச் செய்தி சொல்லுங்கள்" - அமெரிக்க அதிபரைக் கேட்டுக்கொண்ட மூத்த செனட்டர்

(படம்:President's Office)

ரஷ்யாவுக்கு எதிரான போரில் வாஷிங்டன் உக்ரேனுக்குப் போதிய ஆதரவு வழங்கவேண்டும்; தவறினால், சீனா தைவானை எடுத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தை அது சீனாவுக்கு ஏற்படுத்தக்கூடும் என்று அமெரிக்காவின் மூத்த செனட்டர் லிண்ட்சே கிரஹம் (Lindsey Graham) எச்சரித்திருக்கிறார்.

நெருக்கமான ரஷ்ய - சீன உறவின் அடிப்படையில் அவர் அவ்வாறு கூறினார்.

கீ்வில் இருந்த திரு. கிரஹம் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியைச் (Volodymyr Zelenskyy) சந்தித்தார்.

உக்ரேனுக்குக் கூடுதல் ஆயுதங்களை அனுப்பும்படி திரு. கிரஹம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைக் கேட்டுக்கொண்டார்.

ஏற்கனவே அமெரிக்கா சுமார் 35 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களைக் கீவிற்கு அனுப்பியிருக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்