அமெரிக்கா - ஈரான் இரண்டாம் சுற்று அமைதிப்பேச்சு விரைவில்: டிரம்ப்
(படம்: Jim WATSON / AFP)
This audio is generated by an AI tool.
ஈரானுடன் இரண்டாம் சுற்று அமைதிப் பேச்சுக்கான நம்பிக்கை மிகுந்திருக்கும் வேளையில் ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா வர்த்தகத்தை முடக்கியிருக்கிறது.
போர் நிறுத்த ஒப்பந்தமே முக்கியம். அதன் முலம் ஈரான் மீண்டெழ முடியும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) கூறினார்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் அமெரிக்க - ஈரான் இரண்டாம் சுற்று அமைதிப் பேச்சு இந்த வாரம் தொடங்கக்கூடும் என்று அவர் சொன்னார்.
முதல் சுற்று அமைதிப்பேச்சில் அமெரிக்கக் குழுவை வழிநடத்திய அந்நாட்டுத் துணையதிபர் JD வான்ஸ் (JD Vance) அடுத்த சுற்றுப் பேச்சுக்கும் தலைமையேற்பார்.
விரைவில் நல்ல முடிவை எதிர்பார்க்கலாம் என்று திரு டிரம்ப் கூறினார்.
ஆனால் ஈரான் இரண்டாம் சுற்று அமைதிப் பேச்சு பற்றி இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
சண்டை நிறுத்தத்தை 45 நாளுக்கு நீட்டிக்க வலியுறுத்துவதாகப் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர்.
வரும் 21ஆம் தேதி முடிவுக்கு வரும் இரண்டு வாரச் சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டிய தேவையிருக்காது என்று அமெரிக்க அதிபர் கூறுகிறார்.