Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இணையத் தாக்குதல் நடத்தக்கூடிய சீனாவின் ஆற்றல் குறித்து 'கவனம் தேவை' - அமெரிக்க வெளியுறவு அமைச்சு எச்சரிக்கை

வாசிப்புநேரம் -
அமெரிக்க வெளியுறவு அமைச்சு அதிமுக்கிய உள்கட்டமைப்புகள் மீது சீனா இணையத் தாக்குதல் நடத்தக்கூடிய ஆற்றல் கொண்டிருப்பது குறித்து விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

பசிபிக் வட்டாரத்தில் அமெரிக்கா கொண்டுள்ள நலன்களுக்கு எதிராக சீனா மின்னிலக்க ரீதியாக வேவு நடவடிக்கை மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டி, மேற்கத்திய இணையப் பாதுகாப்பு, வேவு அமைப்புகள் முன்னதாக எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டன.

Microsoft நிறுவனமும் அவற்றில் அடங்கும்.

சீன அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற இணைய ஊடுருவிகள், குவாம் (Guam) உள்ளிட்ட பல பகுதிகளில் வேவுத் தகவல்களைத் திரட்டும் நோக்கில் கண்காணிப்பு மென்பொருளைப் பொருத்தியதாக அவை குறிப்பிட்டன.

குறிப்பாக குவாமில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் முக்கிய ராணுவத் தளங்களில் ஒன்று அங்கு உள்ளது.

வேவு நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகளைச் சீனா மறுத்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்