Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க அஞ்சல் சேவை சீனா, ஹாங்காங்கிலிருந்து வரும் பொட்டலங்களை நிறுத்தி வைத்திருக்கிறது

வாசிப்புநேரம் -
அமெரிக்க அஞ்சல் சேவை சீனா, ஹாங்காங்கிலிருந்து வரும் பொட்டலங்களை நிறுத்தி வைத்திருக்கிறது

AFP/Frederic J. Brown

சீனா ஹாங்காங் ஆகியவற்றிலிருந்து வரும் பொட்டலங்களை அமெரிக்க அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. 

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சீனப் பொருள்கள் மீது கூடுதலாக 10 விழுக்காட்டு வரி விதித்திருக்கிறார். 

குறைந்த மதிப்புள்ள பொருள்களுக்கு வழங்கப்பட்ட வரிக் கழிவும் இனி நீக்கப்படும் என்று அவர் அறிவித்தார். 

அதையடுத்து அமெரிக்க அஞ்சல் சேவை பொட்டலங்களை நிறுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

புதிய தகவல் வரும்வரை தடை நடப்பில் இருக்கும் என்று அது சொன்னது. 

அமெரிக்காவில் அண்மை ஆண்டுகளாக Shein, Temu ஆகிய சீன வர்த்தகர்களிடமிருந்து வாங்கப்படும் பொருள்கள் வெகுவாக அதிகரித்துள்ளன.

குறைந்த மதிப்புள்ள பொருள்களுக்கு வழங்கப்பட்ட வரிக் கழிவுக்குத் தகுதிபெறும் அந்தப் பொட்டலங்கள் அனைத்தையும் சோதனை செய்வது சிரமமாகியுள்ளதாகக் கருதப்படுகிறது.

ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்