ஈரானைத் தாக்கிய அமெரிக்கா..அமைதிப் பேச்சில் சிக்கல்?
படம்: REUTERS/Stringer TPX IMAGES OF THE DAY
This audio is generated by an AI tool.
அமெரிக்க ராணுவம் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டிருக்கிறது.
ஹோர்முஸ் நீரிணையில் சென்றுகொண்டிருந்த 3 வர்த்தகக் கப்பல்களை ஈரான் தாக்கியதற்கான பதிலடி இது என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.
பல பகுதிகளில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் கூறின.
ஈரான் அந்தத் தாக்குதல்களைக் கடுமையாகச் சாடியிருக்கிறது.
சென்ற மாதம் எட்டப்பட்ட தற்காலிகச் சண்டை நிறுத்தம் ஊசலாடுகிறது.
தாக்குதல்கள் ஒப்பந்தத்தை மீறும் செயலாகக் கருதப்படும் என்று இருத் தரப்புமே கூறியிருந்தன.
இதனால் அமைதிப் பேச்சுகள் இன்னும் சிக்கலாகும் என்று கருதப்படுகிறது.