Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இந்தியர்கள் அமெரிக்க விசா பெறுவதை விரைவுபடுத்தப் புதிய திட்டங்கள்

வாசிப்புநேரம் -

இந்தியர்கள் அமெரிக்க விசா பெறுவதற்காகக் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்க அமெரிக்கத் தூதரகம் சில புதிய திட்டங்களை  நடைமுறைப்படுத்தியுள்ளது.  

இந்தியர்கள் அமெரிக்க விசா பெறுவதற்கு அதிகபட்சம் ஈராண்டு வரை காத்திருக்கவேண்டியுள்ளது. 

கோவிட்-19 காலக்கட்டத்தில் இந்தியாவில் அமெரிக்கத் தூதரகத்தின் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டதால் வேலைகளில் தாமதம் ஏற்பட்டிருந்தது. 

அதனால் அமெரிக்காவில் இந்திய ஊழியர்களை நம்பியுள்ள வர்த்தக நிறுவனங்கள் மட்டுமல்ல,   அமெரிக்காவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களும் பாதிக்கப்பட்டனர்.  

காத்திருப்பு நேரத்தைக் குறைத்து இந்தியர்களுக்கு விரைவாக விசா வழங்க அமெரிக்கத் தூதரகம் திட்டமிடுகிறது.  

மும்பையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வார நாள்களில் அதன் வேலை நேரத்தை நீட்டித்துள்ளது. 

இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் வேலை செய்யும் நிரந்தர அதிகாரிகளின் எண்ணிக்கையையும் அமெரிக்கா அதிகரிக்கவிருக்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்