Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் காட்டுத்தீ - 10 பேர் மரணம்

வாசிப்புநேரம் -

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) காட்டுத் தீயில் மாண்டோர் எண்ணிக்கை 10க்கு அதிகரித்துள்ளது. 

பலத்த காற்று வீசலாம் என்பது  முன்னுரைப்பு. நிலைமை மேலும் மோசமாகலாம். 

சுமார் 180,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். 

தற்போது 5 இடங்களில் தீ பற்றியெரிகிறது.

அவற்றுள் Pacific Palisades வட்டாரத்தில் ஆக மோசமான நிலை. அங்கு 10,000 காற்பந்துத் திடல்களின் பரப்பளவில் நெருப்பு பரவியுள்ளது. 

5,000க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாயின. மக்கள் செய்வதறியாமல் தவித்துப்போயிருக்கின்றனர். 

இந்நிலையில் Hollywood Hills பகுதியில் நெருப்புப் பரவல் தணிந்திருக்கிறது. அங்கு வெளியேற்ற உத்தரவு மீட்டுக்கொள்ளப்பட்டது. 

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்